சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவஸ்தலம் சீர்காழி. அங்கே வேத வேள்வித்துறை நிரம்பிய பெரியார் சிவபாத இருதயர். அவருடைய மனைவியார் பகவதியார். இருவருக்கும் இறைவன் திருவருளே உருவாக ஒர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இறைவன் அருளால் இரண்டு ஆண்டுகள் நிறைந்து மூன்றாம் ஆண்டு நடந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் சிவபாத இருதயர் காலையில் நீராடும் பொருட்டுக் கோயிலைச் சார்ந்த பிரம தீர்த்தத்தை நோக்கிப் புறப்பட்டார். அவருடைய குழந்தை தானும் வருவேனென்று பிடிவாதம் செய்து அழுதான். வேறு வழி இன்றி குழந்தையையும் அழைத்துச்சென்றார். திருக்குளத்தின் கரையிலே குழந்தையய் அமரவைத்துவிட்டு குளத்தினுள் மூழ்கி நீராடச்சென்றார் சிவபாத இருதயர். மந்தர விதிப்படியே நீராடினார்."அகமருஷண ஸ்நானம்" என்பது ஒரு வகை. நீருக்குள்ளே மூழ்கியபடியே சில மந்திரங்களை சொல்லவேண்டும். அவர் அப்படி மூழ்கியிருக்கையில், கரையில் இருந்த குழந்தை தம் தந்தையாரைக் காணாமல் கோயிலின் சிகரத்தைப் பார்த்து, "அம்மா! அப்பா!" என்று அழுதான். அப்போது சீர்காழியில் கட்டுமலியின்மேல் கோயில் கொண்டிருக்கும் தோணியப்பர் உமாதேவியாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளி வந்தார். உமாதேவியார் பாலை ஒரு கிண்ணத்திற் கறந்து அதில் ஞானத்தைக் குழைத்து அழுதபிள்ளைக்கு ஊட்டினார். பின்பு இருவரும் மறைந்தனர்.
அம்மையின் திரு முலைப்பால் உண்டமையால் அந்தப் பிள்ளைக்குச் "சிவஞான உணர்ச்சி உண்டாயிற்று. அவர் திருஞான சம்பந்தர் என்ற திருநாமம் பெற்றார்.
குளத்தில் நீராடிவிட்டுக் கரைக்கு வந்த சிவபாத இருதயர் தம்முடைய குழந்தையய்ப் பார்த்தார். வாயில் பால் வழிய நிற்பதைக் கண்டு, "யார் உனக்குப் பால் தந்தார்"? என்று அதட்டிக் கேட்டார். ஞானசம்பந்தர் ஒரு விரலால் தோணியப்பரைச் சுட்டிக் காட்டி, "தோடுடைய செவியன்" என்ற பாடலைப் பாடி, "இவரே!" என்று காட்டினார். அந்தப் பாடலே திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய முதற்ப் பாடல். பிறகு பத்துப் பாடல்களாகப் பாடி அந்தப் பதிகத்தை நிறைவேற்றினார். தேவாரத்தின் முதல் பதிகம் அதுவே. மூன்று ஆண்டுக் குழந்தை ஞான சம்பந்தர். அந்தக் குழந்தை மாசு மறுவற்ற தூய உள்ளம் படைத்தவர். இறைவனுடைய திருக்கோலத்தைப் பாடுகிறார்.
அந்தத் திருக்கோலத்தில் வேறு நிறமுள்ள பொருள்கள் பல இருந்தும் அவற்றில் இந்தக் குழந்தையின் உள்ளம் செல்லவில்லை. இறைவன் திருக் குழுத்தில் நீலநஞ்சம் இருக்கிறது; அவன் திருமுடியில் சிவந்த சடை இருக்கிறது; அங்கே பொன்னிறக் கொன்றையும் உண்டு. இப்படிப் பல நிறமுள்ள பொருள்கல் இரைவனிடம் இருந்தாலும் தூயண்பொருள்களிலேதான் அந்தக் குழந்தையின் கண் ஓடியது.
உலகில் உள்ள குழந்தைகளுக்கு வன்ண வண்ணமான விளையாட்டுப் பண்டங்களை வாங்கித் தருவார்கள். கன்ணைப் பறிக்கும் வண்ணப் படங்கள் உள்ளபுத்தகங்களை அளிப்பார்கள். உலகியலில் பல வகையான விளையாட்டு சாமான்களை வாங்கி குழந்தையய் மகிழ்விப்பார்கள். குழந்தைகள் பலவித வண்ணக்குவியலைக் கண்டு மகிழ்கின்றன. ஆனால் இந்தக் குழந்தையோ ஞானசம்பந்தக் குழந்தை. ஞானம் தூயது; அதற்கு வெண்மை நிறந்தான் அடையாளம். குணங்கள் பலவானாலும் அவற்றை மூன்றுக்குள்ளே அடக்குவார்கள். சத்துவம், ராஜசம், தாமசம் என்பவை அவை. இவற்றிற்கு முறையே வெண்மை, செம்மை, கருமை என்பவற்றை நிறமாகக் கூறுவார்கள். எம்பெருமாட்டி ஊட்டிய ஞானப்பால் வெண்மை நிறம் பெற்றது. அவர் கண்கள் இறைவன் திருக்கோலத்தில் சத்துவ குணத்தைக் காட்டும் ண்மையய்யுடைய பொருள்களையெ கண்டு மகிழ்ந்தன.
தந்தையார் "யார் பால் கொடுத்தார்?" என்று கேட்டார். அதற்குக் குழந்தை நேர்முகமாகப் பதில் சொல்லவில்லை. யாரோ அயலார், அந்ததௌறவின் முறையும் இல்லாதார், தம் குழந்தைக்குப் பால் கொடுத்துச் சென்றாரோ என்ற ஐயத்தால் சிவபாத இருதயர் கேட்டார். சம்பந்தப் பெருமான், "இறைவன் கட்டளையிட இறைவி பால் கொடுத்தாள்" என்று சொல்லியிருக்கலாம். அவர் அப்படிச் சொல்லவில்லை. "இத்தகையதிருக்கோலத்தில் வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதோ இந்தப் பிரமபுரமாகிய சீர்காழியில் உள்ள பெருமான்" என்று சொல்கிறார். பாலைபற்றிய பேச்சே பாட்டில் வரவில்லை.
சம்பந்தப் பெருமான் வெறும் பாலை உண்ணவில்லை. மற்றவர்கள் தரும் பால் நாவுக்கு இனிமை தரும்; அப்பால் வயிற்றிற்குள்ளே சென்று பசியைப் போக்கும். அது உடம்புக்குப் பயனைத் தருவது. ஆனால், உமாதேவியார் தந்த பால் சிவஞானத்த்தை அருளியது. அது உள்ளத்தைக் கவர்ந்து அதன் வழியே உயிருக்கு இன்பந் தருவது. மற்றவர்களெல்லாம் பலபல நெறியிலே சென்று பலபல செயலும் பெற்றுப் பாசத்துக்கு உட்படுகிறவர்கள். ஞானசம்பந்தப் பெருமானோ, 'ஒரு நெறியில் வரும் ஞானத்தால், அரு நெறியிலே மனம் வைத்து உணர்ந்து, இறைவன் திருநெறித் தமிழ் ஒன்றையே உரைத்து, அவனைப் பணியும் தொண்டு ஒன்றையே செய்யப் புகுந்தவர்.
ஆகவே, "எனக்குப் பால் கொடுத்ததைத் தானே நீங்கள் கேட்கிறீர்கள்? அவன் என் உள்ளத்தையே கவர்ந்துவிட்டான். உலகில் யார் யாரையோ என்னியிருந்த பழைய உள்ளம் எனக்கு இப்போது இல்லை; தானே நினைத்துத் தானே இன்ப துன்ப உணர்ச்சி பெறும் உள்ளத்தை அவன் கவர்ந்து கொண்டான். இனி அந்த உள்ளம் என்னிடம் இல்லை. அவனிடம் இருக்கிறது; அவன் வசப்பட்டிருக்கிறது. அவன் அதனை எப்படியெல்லாம் இயக்குகிறானோ அப்படியெல்லாம் இயங்கும். நினிக்கச் செய்தால் நினைக்கும்; மறக்கச் செய்தால் மறக்கும். இனி ஒரு கணமும் அவனை விட்டுப் பிரியாது" என்பதை யெல்லாம் உள்ளடக்கி, 'என் உள்ளம் கவர் கள்வன், பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்" என்கிறார்.